Tuesday, February 21, 2023

சப்தம்/நிசப்தம் by Veena Shankar

 


சப்தம் / நிசப்தம்


பிறப்பின் போது சிசுவின் அழுகை சப்தம் 


அகம் முகம் மலர உற்றாரின் சிரிப்பு சப்தம்


அதிகாலையில் கேட்கும் கோயில் மணி சப்தம் 


காலை வேளையில் பக்ஷிகள் எழுப்பும் சப்தம் 


நடுநிசியில் நமக்கு மட்டுமே கேட்கும் கொலுசு சப்தம்


தனிமையில் நிசப்த வேளையில் பல்லிகள் எழுப்பும் சப்தம் 


குழாயடி சண்டையால் அழியும் நிசப்தம் 


குடும்பத் தகராறு கொடுக்கும் நிசப்தம்


ஆய்வாளர் வரும் சமையம் நிலவும் சப்தம்


பிரிவு உபசார விழாவில் அதிகமாகும் சப்தம்


பின் தொடரும் விசும்பல் சப்தம்


இறுதியில் தோன்றும் நிசப்தம் 


இறந்தவரின் உடல் முன் அழும் சப்தம்


எரியூட்டல் செய்யும்போது நிலவும் நிசப்தம்


உறங்கும் வேளையில் அடுத்தவருக்கு கேட்கும் குறட்டை சப்தம்  

நிசப்தத்தை கலைக்கிறது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...