Tuesday, February 7, 2023

மதியும் பெண்ணின் மதியும் by Veena Shankar

 


மதியைப் பார்த்து பெண்ணின் மதி மயங்கியதா?

இல்லை

மதியுள்ள பெண்ணால் மதி மயங்கி நின்றதோ?

இயற்கையில் மதியின் விளையாட்டுக்கள்

இரவில் வெளிப்படும் மதியும், மதியால் வென்ற வாழ்வும் இருளைப் போக்கும்

காத்திரு வந்துவிடுவேன் என்ற காதலன் பூத்திருந்த பூக்கள் வாடியதும்

சேர்த்திருந்த கொள்ளை அழகை நிலவு தன் வெளிச்சத்தில் ஒளியரச்செய்தும் 

வைத்திருந்த பானை நீர் முழுவதும் அருந்தியதும் தலையில் ஒரு கை பானையில் மறு கை என வைத்து சிந்தித்திருப்பதும் பெண்ணின் விதியே

பூமியில் வாழும் பெண்ணுக்கு நிலவின் மீதும் ஆசை, அதை தாங்கிக் கொள்ள துடிக்கிறாள்

வெண்ணிலவில் கால் பதிக்க ஆசைபடுவதை விட இந்த கன்னியின் மனதை சிந்திக்க வைத்தது யார் என்று பார்க்க வேண்டும்

கால் பாதங்கள் பூமியில் பட

ஒரு கையில் நிலவினை தாங்கிக் கொண்டும்

மறு கையில் பானை பிடித்துக்கொண்டும்

சிந்திப்பது எதற்கு? எதை தவற விட்டாலும் பாதிப்பு பெண்ணுக்கே. இரண்டும் தண்ணீரை தேடும் சிந்தனை தான்

குளிர்ச்சியோடு கூடிய அழகும் (நிலவு)

அறிவோடு கூடிய அழகும் (பெண்)

மலர்ச்சியோடு கூடிய அழகும் (மலர்)

பயிற்சியோடு கூடிய அழகும் (பானை)

அழற்சி கொள்ளுமோ?

தான் வந்தும் பொழுது வீணாவது கண்டு நிலவும்

எதிர்பார்த்து நின்றது பெண்ணின் மனம் தன் காதலன் வாராது

மெய் மறந்தது மணக்கவும் மறந்தது மலரும்

இதில் பக்குவப்பட்டது பானை மட்டும் தான், தீயினில் சுட்டதால்

3 comments:

  1. கடைசி வரி கவிதையின் உயிரோட்டம் நன்று

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...