Sunday, February 5, 2023

உன்னில் நானாக by Veena Shankar

 


உன்னில் நானாக


நீ அணியும் செருப்பாக மாறவும் நான் தயார், தேய்ந்த பின்னும் நீ என்னை தூக்கி எறியாமல் இருந்தால்


உன் கால் கொலுசாகவும் இருக்க நான் தயார், என் பளப்பளப்பு குறைந்த பின்னும் நீ என்னை கழட்டாமல் இருந்தால்


உன் கை வளையலாக இருக்க நான் தயார், புது வரவு வந்தாலும் நீ என்னை மாற்றாமல் இருந்தால்


உன் கழுத்து மாலையாகவும் இருக்க நான் தயார், என் மினுமினுப்பு மங்கினாலும் நீ என்னை மறுக்காமல் இருந்தால்


உன் உடலை மறைக்கும் ஆடையாகவும் இருக்க நான் தயார், அடித்து துவைத்து நீ என்னை கிழிக்காமல் இருந்தால்


உன் விரல் மோதிரமாகவும் மாற நான் தயார், நான் நசுங்கி போனாலும் நீ என்னை வெறுக்காமல் இருந்தால்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...