Saturday, February 4, 2023

மழை சாரல் by Vidhya Nivash

 


துளி துளி மழைத்துளி

சொட்ட சொட்ட நனைந்த கொடியும் செடியும்

தூரத்தில் ஆடும் மரமும் மேகமும்

பல நாள் கழித்து குளித்த வீட்டின் ஓடும் சுவரும்

எங்கும் நிறைய மழை நீர்

 குளிர்ந்த மண்ணும் மண்வாசனையும்..

மழைநீர் குடித்த கொடியே தளதளவென படர

பூத்துக்குலுங்க காத்திருக்கும் செடியும்

சுவரின் ஒரத்தில் படர்ந்த பாசியின் படலம் கண்ணாடி போல் வழுக்க

பார்த்து நடப்போம் சாலையில் மழை சாரலில்.. 




2 comments:

  1. தொடரட்டும் தாங்கள் கவி பயணம்

    நன்று

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...