Wednesday, February 1, 2023

முள்ளும் அழகும் by Veena Shankar

 


பெண் சிலையாய் நின்றாலும் துன்பப்படுத்தும் மனிதர்கள் இருக்கும் போது இந்த பெண்ணுக்கும் முள்ளாக மாறி துன்பபடுத்தும் இயற்கை


சிலையானாலும் ஓவியக்கலையானாலும் பெண் என்பவள் தூண்டில் வலையில் சிக்காத மீன்


சேலையும் அதை தாங்கி நிற்கும் சிலையும்

குடமும் அதை ஏந்தி செல்லும் கரமும்

அலையாய் கூந்தலும் அது தவழ்ந்து வரும் இடமும்

தெருவில் நடந்தாலும் அங்கே பதியும் கால் தடமும்

வெண் தோற்றமும் அதில் காணும்

செருக்கு கொண்ட முகமும்

தீண்டிய முள்ளும் அதை கைப்பற்ற நினைக்கும் விரல்களும்

மறைத்த உடையும் அது மறைக்காத இடையும்

வளர்ந்த மேனியும் அதில் மிளிரும் 

வாழை தண்டு கழுத்தும்

பார்ப்பதில் சுகமும் சுகந்தமும் அது அறியாத மனமும்

தவிர்க்கும் பெண்ணும் தடுமாறும் ஆண்களும் 

தடம் மாறவும் வாய்ப்புண்டு பெண்ணே! உன் அழகை உன்னுள்ளே பூட்டி வைத்துக்கொள்

2 comments:

  1. பெண்ணை பெண் ரசித்து எழுதிய கவிதை --கவிதை நன்று

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...