Saturday, February 4, 2023

அழகி போட்டிக்கு நாங்கள் தயார் by Veena Shankar

 


அழகி போட்டிக்கு நாங்கள் தயார், வீரமுள்ள அழகன்கள் எங்கே?


குடத்தில் தண்ணீர் எடுக்க வந்த இடத்தில் நடந்த கிராம அழகி போட்டி. வென்றது யார்? இவர்களை வெல்லப் போகும் ஆண் யார்?


நீல வானத்திற்கும் கரு மேகங்களுக்கும் இடையே இரு மயில்களின் பிரவேசமா?


புகைப்படம் எடுக்கும் வசதியில்லாத காலத்தில் ஓவியனின் அலங்கார படைப்பு. தற்போது காண முடிவதில்லை இந்த பெண்களின் அழகை அலைபேசியின் வரவால், நிஜம் எது? நிழல் எது? என்பதை கண்டுபிடிக்க முடியாததால்


உயிரற்ற ஓவியத்தின் உயிருள்ள படைப்பாய் மாற்றினான் உயிருள்ள ஓவியன் உயிரற்ற தூரிகையின் உதவியால்


தண்ணீர் எடுக்க வந்த இடத்தில் புறம் பேச வரவில்லை இவர்கள், அமைதியை நாடி வர, அலைபேசியை புறம் தள்ளிவிட்டு வந்தனர்


புடவை எடுக்க போன இடத்தில் விளம்பரமாக மாறி போன மங்கையர்


மருதாணி தேவையில்லை கரம் சிவக்க

பொன் தேவையில்லை மேனி தகிக்க

பட்டாடை தேவையில்லை அடுத்தவர் ரசிக்க

அரிதாரம் தேவையில்லை மணாளனை ஈர்க்க

 பொருள் தேவையில்லை திருமணம் சிறக்க

ஆடம்பரம் தேவையில்லை சபையை அலங்கரிக்க

ஆணழகன் மட்டும் வேண்டும் எங்கள் மனம் கோணாமல் நடக்க

2 comments:

  1. பெண்ணியத்தை சமுதாயம் போற்ற எங்களின் ஆதரவு எப்பொழுதும்

    அருமை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...