Saturday, February 25, 2023

" ம. ன " வரிசைக்கு " தெரியாது " by Veena Shankar



 " ம. ன " வரிசைக்கு " தெரியாது "


மங்கைக்கு ரகசியத்தை காக்க தெரியாது


மலருக்கு அழகை பூட்ட தெரியாது


மதியுள்ளோருக்கு அறிவை உதற தெரியாது


மத்தளத்திற்கு இடியை உதிர்க்க தெரியாது


மாவீரனுக்கு வீரத்தை இழக்க தெரியாது


மாலைக்கு சூரியனை தக்க வைக்க தெரியாது


மிதவைக்கு தண்ணீரை ஏந்த தெரியாது


மீனுக்கு மண்ணில் வாழ்ந்து காட்ட தெரியாது


முகத்திற்கு வசீகரத்தை மறைக்க தெரியாது


மூளைக்கு நுட்பமன்றி வேறு ஏதும் தெரியாது


மெல்லிய காற்றுக்கு உஷ்ணம் கொடுக்க தெரியாது


மேகத்திற்கு மழையை தடுக்க தெரியாது


மையலுக்கு சூது கொள்ள தெரியாது


மொத்தத்தில் மனிதநேயத்தின் அருமை தெரியாது


மோட்சத்திற்கு வழியும் தெரியாது


மௌனத்திற்கு விடையும் சொல்ல தெரியாது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...