Wednesday, February 8, 2023

அடி முடி மடி தொடும் பக்தன் by Veena Shankar

 


ஜடா முனியின் அடி தொழும் பக்தன், மணிமுடியை தொடும் மனைவி

அன்பின் பரிசாக தலையின் மேலும் திருவடியின் கீழும்

கழுத்தை சுற்றிய பாம்பும், தலையில் உள்ள கங்கையும் அடியை தொடும் பக்தனும் பரமனின் அன்புக்கே

உடலில் பாதியை பகிர்ந்த சிவன், பக்தனின் பக்தியை மெச்சி அவனுக்கு எங்கே இடம் கொடுப்பது என்ற சிந்தனையில் சிவன்

பறக்கும் விமானத்தில் தேவியோடு செல்ல, அங்கேயும் விடாது துரத்தும் பக்தன், சங்கடத்தில் சங்கரன்

அடி கொடுத்தால் மடி கேட்கும் பக்தனுக்கு ஜடை முடி கொடுக்கும் வரம் என்ன?

பெண்களும் பொறாமை கொண்டோம் அடர் முடியை கண்டு, ஓ! கங்கையை தலையில் கொண்டு நீராடியதால் தான் உங்கள் கேசத்திற்கு இவ்வளவு அழகோ

திருநங்கையின் முன்னோடியோ நீங்கள்

அர்த்தநாரீஸ்வரராய் அருள் பாலிப்பதால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...