Tuesday, February 28, 2023

அவசியமா அவசரமா by Vidhya Nivash



 நாக்கில் பட்டவுடன் சுர் என்றது

உணர்ச்சிமிக்க நாக்கு சுரணையற்றது

 நொடி பொழுதில் உன்னை பருகியுடன்

ஒவ்வொரு முறை நினைத்தாலும்

உனை கண்ட உற்சாகத்தில் 

தன்நிலை மறந்து நாக்கை சுட்டதே 

மிச்சம் 

அவசரம் சில சமயங்களில் அது 

அவசியமா 

அவ்வளவு நேரம் இல்லாத பசி

 எங்கிருந்து வந்தது ஹோட்டலில்

 காத்திருக்கும் போது

அவ்வளவு நேரம் வீணாக்கிவிட்டு

 கடைசி வினாடியில் வரும் அவசரம் 

 தலைக்கு மேல்தினமும் காலையில்

 உணவு உண்ணும் போது

அவசரத்தில் கொட்டிய வார்த்தை,

தண்ணீர்..

அவசியமான அவசரத்தை தவிர 

சிலபலநேரத்தில்  அவசரத்தை  துறந்து

 அவசியமான பொறுமையை அணிவோமா

குறிப்பாக சூப் குடிக்கும் போது..





2 comments:

  1. இளஞ்சூடான சூப்பின் மனமும் காரணமாக இருக்கலாம். அவசரமும் அவசியமே நாம் வைத்த ரசத்தை அடுத்தவர் சுவைக்கும் முன் நாம்சுவைத்து ரசிக்க. அழகு வித்யா.

    ReplyDelete
  2. உண்மை நன்றி வீணா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...