Tuesday, February 14, 2023

அன்புள்ள அம்மாவிற்கும் அகிலாவிற்கும்

 


அன்புள்ள அம்மாவிற்கும் அகிலாவிற்கும்,

சதா இருபத்திநான்கு மணிநேரமும்  எனை பற்றி ஏங்கும் உயிர் உன்னையின்றி வேறு யார் உண்டு அம்மா.ஒவ்வொரு விஷயத்திலும் போராடி இதில் என்னை தள்ளி தள்ளி இன்று நினைத்தாலும்  என்ன சொல்வது.கிழித்த கோட்டை தாண்டாமல் வளர்ந்தேன்.உங்களுக்கு என்று ஏதும் இல்லாமல் உங்கள் கனவே நாங்கள் தான்.என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தினாய்.இன்றும் உன்னிடம் உள்ள துடிப்பு கண்டு வியக்கிறேன்.கல்வி என்ற உயர்ந்த செல்வத்தை கொடுத்தீர்.என்னால் முடிந்த வரை அதை நல்முறையில் பயன்படுத்துவேன் அம்மா.

என்னை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அகிலா.விதை ஒன்று தூவ பல நாள் சேமிப்புகிடங்கில் இருந்த விதைநெல் முளைத்த கதை.கண்டது கேட்டது படித்தது பிடித்தது எதோ ஒரு பொறுப்பை கொடுக்க என்னுள் உறங்கியது முளைத்தது.எண்ணங்களை சுதந்திரமாக அதை அப்படியே ஏற்றுக்கொண்ட விதம் இன்று திரும்பி பார்த்தால் அது நீயா எங்கே இருந்தாய்.பலரின் பாராட்டுகள் உற்சாகத்தை கொடுத்தது .புகழ்ச்சிக்கு பழக்கப்பட்ட மனதில் ஒரு தேக்கம்.மீண்டும் எனக்காக தொடரும் பயணம்.அதில் இந்த ஆண்டில் கனவை தொட்டேன் இன்னும் பல கனவுகளை தொடுவேன்..அதற்கு அடிக்கோடிட்ட  தூண்டில் நீங்கள் .உங்களுக்கு நன்றிகள் இல்லை கடமைப்பட்டுள்ளேன்.


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பூமியில் நடும் விதை விருட்சமாக மாறுவது இயல்பு. ஆனால் நம் மனதில் இடும் விதையோடு உந்துதல் சக்தியும் தேவைப்படும் அதற்கு சிறந்த உதாறனமாக இருப்பவர் தாயும் உண்மையான நண்பர்களும். தங்கள் மனதில் இருக்கும் விருட்சம் ஆலமரமாக இருக்க என் வாழ்த்துக்கள் வித்யா.

    ReplyDelete
  3. மிக்க நன்றி வீணா🙏

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...