Wednesday, February 15, 2023

அன்றும் உதித்த சூரியன் by Vidhya Nivash



மேகங்கள் சேர்ந்து ஒன்றாய் கொட்டுகிறது மேளத்தை 

மேளம் அதிர வானம் முழங்க 

பூமி பிளக்க மெதுவாக அதிர 

ஒவ்வொன்றாக நகர 

ஓரே ஓலச்சத்தம்

சத்தில் பறவைகள் பரபரப்பாக 

உறங்கி கொண்டிருந்த நகரம்

மெதுவாக குலுங்க தூக்கத்தில் யார்

 உலுக்கியது என கண் திறக்கும் முன் சரிந்த

 உடல் வாழ்வின் விளிம்பில் நழுவியதை 

விழுங்க காத்திருந்த பாதாளம்

எங்கே போனது பூமியின் வேர் அதை ஆட்டியது 

யார்?



2 comments:

  1. அருமையான காலத்திற்கான பதிவு. பூகம்பத்தின் அதிர்வு மனிதனின் மனதிலும் அதிர்வு. விளைவு உயிர்பலி. நினைக்க நினைக்க குமுறுகிறது மனம், மனிதனின் ஆளுமையா? இறைவனின் ஆளுமையா?

    ReplyDelete
  2. தெரியவில்லை..நம்மால் முடிந்தது உதவி கரம்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...