ஒளி / பெண்
ஒளிசுடரின் பக்க உருவம் நிற்கும் அந்த பெண்ணின் முகத்தை பிரதிபலிக்கிறதே
மாலை சூட்டிய மணவாளனை மனசு அறியாத மழலைக்காக மாலையில் மங்கிய ஒளியில் எதிர்நோக்கும் மங்கை
விளக்கொளியின் அருகில் இன்னுமொரு விளக்கு அதே வண்ணத்தில்
கால மாலையும் அணியும் மாலையும் பிரியும் நேரம்
திறந்த விழியிலும் விரிந்த இதழிலும்
கார் இருளிலும் மங்கிய ஒளியிலும்
அடர்ந்த புருவத்திலும் சிவந்த நெற்றிபொட்டிலும்
குவிந்த மூக்குத்தியிலும் பூ சொரிந்த ஆடையிலும்
பரந்த நெற்றியிலும் சிறந்த அணிகலன்களிலும்
வனப்புடைய மேனியிலும்
மொத்தத்தில் உன் பார்வையிலும் வீழ்ந்தேன்
நான் என்றது ஒளிர்ந்த விளக்கு
வாதிடவும் வாத்தியத்திற்கும் தேவை பெண்
வந்திடவும் வாழ்ந்திடவும் ஆணுக்கு தேவை பெண்
விந்தைக்கு வித்தாகும் விதியாகும் பெண்
அருந்த மருந்தாகும் விருந்தாகும் பெண்
ஒளி விளக்கில் ஒரு விளக்கு
நீண்ட நேரம் நின்று ஒளி தருவதில் யாருக்கு முதலிடம்?
போட்டியில் சுடரும் சூடியவளும்
முந்தானையால் முழிக்கிறது விளக்கும் அவனும்
எரியவா? அணைக்கவா?
விளக்கு, பெண் ஆகிய இருவரின் சோக கதையும் ஒன்றே!
அணை (ந்)த்ததால் வீழ்ந்த வாழ்வு
இரண்டும் விலை போய் விட்டன அழகாய் இருப்பதால்
நீயும் நானும் ஒன்று. எண்ணெய் இல்லாமல் நீ இல்லை.
என்னவர் இல்லாமல் நானில்லை
விளக்கே நீ விலகிக் கொள். விலைக்கு வந்த இடத்தில்
நான் விலகி நிற்காமல் இருக்க

Super arumai
ReplyDeleteநன்றி
ReplyDelete