Friday, September 29, 2023

கார்மேகம் by Chinna

 


அண்ணாந்து பார்க்கையில்

சட்டென்று முகத்தில் ஒரு நீர்த்துளி

அது மழைத்துளி குளிர்ந்த காற்று என்

 மேல் மோதி செல்கிறது


அந்தப் பள்ளத்தாக்கில் குயிலொன்று

 கூவிய சத்தம்

பாறைகளில் மோதி மோதி பவனி

 வந்து கொண்டிருந்தது


மாலை நேரத்தில் கார் மேகம் சூழ

அன்று அந்திமாலை விடுப்பில்

 இருந்தது

நேரம் ஆக ஆக சில்லென்று

 மழைத்துளி என் மேல்

நனைத்தும் நனைக்காத வாறு


என் மேனி மிருதுவான வெப்பத்தை

 நோக்கி மனம் அலைய சட்டென்று

 தோன்றுகிறாள் என்னுள் உள்ளவள்

கை கோர்த்து நடந்தோம்

குளிர் என்னை விட்டு விலகி பத்தடி

 தள்ளி நின்றது


இப்பொழுது அப்படி ஒரு உஷ்ணம்

கை கோர்த்தவாறு பாதை எங்கு

 போகிறது என்று தெரியாமல்

கால் ஒரு பக்கம் போக

மனம் வேறு திசையில் பயணிக்கத்

 தொடங்கியது


களிப்பில் வார்த்தை தொண்டையில்

மீன் முள் போல் சிக்கிக்கொள்ள


ஆதிமொழி, விழி மொழி

எண்ணத்தை கடத்துதல் போன்று

வார்த்தை கூடு விட்டு கூடு பாய்ந்தது


அந்த இரவு அப்படியே நீளாதா

என்று தோன்றியது அப்போதுதான்

சூரியன் மேல் எனக்கு வெறுப்பு

 தோன்றியது


அவள் அருகில் தோளோடு தோள் உரச


சட்டென்று அப்பா மின்விசிறி

 அணைக்க

அம்மா இன்னுமா தூங்குற டேய்

 எந்திரி


---சின்னா



4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...