Thursday, September 28, 2023

காரிருள் by Kiruthika

  


காரிருள்..


உன்னை..

ஏறெடுத்து ஏக்கத்துடன் ....

நாங்கள் நோக்க..!..

நீயோ ..

சற்று முன் அங்கேயும்..

இதோ..

இப்போது - இங்கேயும் ..

என பாசாங்கு..

செய்வது தான் முறையோ?!!.

நீ ..

கார்மேகமா இல்லை 

வெறும் கனவா ...

கண் திறந்ததும் -

கலைந்து போக ??!!!

கொஞ்சம் - நாங்கள் 

இளைப்பாற..

ஓர் இடத்தில் நின்று ..

கருணை காட்டு -

காதல் செய் -

எங்கள் மேல் ...

மழை கவிதை வார்த்து!!!

கார்மேக கள்வனே...!!!!...

விடிந்ததில் இருந்து..

இன்னும் வடியாமல்..

அடம் பிடித்தபடி ..

தலைக்கு மேல் வலம் வரும் ..கார்மேக

 கண்ணனுக்கு ..ஒரு ஆசை மடல் 👆..

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...