Friday, September 29, 2023

உலக இதய தினம் by Kiruthika

  


Adada .. இன்று இதயத்திற்கு ..இதமான நாள் ..கவி தோய்த்த இரத்தம் பாயும் நாளங்கள்..சுத்தம்.

சித்தம் ...


இதயம் ..

இளைப்பாற -

கொஞ்சம் வழி காண..

துடித்ததும்..அதே இதயமே!!!


எது வேண்டுமோ..

அதை மட்டுமே ..

உள் அனுமதிப்போம்..!!!


நாவிற்கு -

இனிப்பு ,காரம் என ரெண்டுமே பழக்கமாக்கியதை போலவே- தான் 

வெற்றியும் ..

தோல்வியும் என 

விளக்கி கொள்வோம்!!!..


வலி தாங்க ..

வலிமை கூட்டி கொள்வோம் ...!!..


ஒற்றை பிள்ளையை ..

கண்ணும் கருத்துமாய் ..

பார்த்து கொள்வது போலவே ..

பக்குமாய் - பதமாக பதமாக ..

அணைத்து கொள்வோம் ..

அக்கறை சேர்ந்த அன்போடு!!!..


பின் ..

இதயம் -

தன்னாலே

இதமாகும் !...


மறுக்காமல்..

மறக்காமல்..

துடிக்கும் !!..

நேர்த்தியாய் !!!!...

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...