இதயமே! என் இதயமே!
எந்திக் கொள்கிறேன் உன்னை
உடலால் தாங்கிக் கொள்கிறேன்
தானம் கொடுக்கிறேன் உன்னை
இன்னொருவர் உயிர் பெற
கொடுக்கிறேன்
தனித்து விடுகிறேன் என் மூளை
சலித்த பிறகு துறந்து விடுகிறேன்
மூர்ச்சையாகிறேன் நீ அதிகம்
துடிப்பதை கண்டு கலங்கி
விடுகிறேன்
தவிக்க வைக்கிறேன் உன்னை
அனுதினமும் அதிர வைக்கிறேன்
பயிற்சி செய்கிறேன் உன்னை
இளமையாய் காட்ட விரும்புகிறேன்
உள்ளிருக்கும் உன்னை காண
விழைகிறேன், ஒரு பிடி சோறு போல
உள்ளங்கையால் அளக்க
நினைக்கிறேன்
என் அடையாளம் இழக்கிறேன் நீ
விலகிய பின் உயிர் துறக்கிறேன்
ஒரு நொடியும் போதும் நீ
என்னிடமிருந்து விலகி நிற்க
காண துடிக்கிறேன் உன்னை , நான்
உடலால் செயலிழந்த பின்
பற்ற நினைக்கிறேன் தானம்
கொடுத்து
இன்னொருவரின் தனம் சிறக்க
ஆண் பெண்ணென்று பேதம் காட்ட
முடியாத
உன்னை முழுதும் ஏற்கிறேன் என்
ஆயுள் வரை
விழி மூடி வழி தேடினேன்,
உனக்கு மாற்று யாரென்று?
விழி பிதுங்கி நின்றது தான் மிச்சம்
வலியில் துடித்த உன்னை காப்பாற்ற
வலை வீசி
தேடுகிறேன் வழியை இன்னும் ,
மீண்டும் சோர்ந்தது நீயும் என் உடலும்
காதலர்களி்டம் மாறி மாறி தஞ்சம்
புகுந்த நீ ,
அழகாய் எட்டியே நின்றாய்
அவர்கள் தம் பெற்றோரிடமிருந்து
உன்னில் காதலுக்காக அம்பு விட்ட
காதலர்களும் உண்டு
உன்னை காதலுக்காக
சின்னமாக்கியவர்களும்
உண்டு

சூப்பர் வீணா
ReplyDeleteஇதயம் நாளே எனக்கு பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாட்டு தான் ஞாபகம் வருது
நன்றி
Delete