ஒருபக்கம் வெளிறிய வானம்
மறுபக்கம் கருமை எத்தனை அழகு.
யாரோ திரைச்சீலையை பிடித்து
விலக்க மெல்ல விடியும் பொழுது.
உற்று பார்த்தால் நல்ல எடுப்பான
மூக்குடன் மனிதனின் முகம்.
பார்ப்பவர் பார்வைக்கும் ,
சிந்தனைக்கும் மாறும் சித்திரம் வான்
என்னும் மாயநதியில் உங்கள்
பூதக்கண்ணாடியை கூர்மையாக்கி
ரசிக்க இவள் விரிவாள்,
மறைவாள்,கரைவாள் காற்றில்....

உண்மை வித்யா. தங்கள் கருத்தோடு ஒத்து போனது என் மனம். மேலும் . என் சிந்தனையில் விழித்துக்கொண்டு படுக்கையில் இருக்கும் படம் போலவும் உணர்ந்தேன். அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா😊
ReplyDeleteகார்மேகமும் கலைத்தாயின்
ReplyDeleteகுழந்தை
தூரிகை, வண்ணம்
இல்லாமல்
வானில் ஓ வம்
தாங்கள் எழுத்து ஒவ்வத்திற்கு
அணிகலன் போன்று
அழகு சேர்க்கின்றது
---நன்று வித்யா
அருமை தோழரே .நன்றி 🙏
ReplyDelete