கரைபுரண்டோடும் ஆற்று நீர் பரந்து,
விரிந்து, நெளிந்து ஓடும்
தண்ணீர்.எங்கு போவீர் !முதலும்
முடிவும் காண கூட வரவா!
அதன் ஓடும் சத்தம் கேட்க கேட்க எதோ
செய்கிறது.நிலைக்கொள்ளாமல்
ஓடும் நீரும் மனமும் சேர்ந்து
சங்கமமாக எங்கும் நிசப்தம்.காவேரி
ஓடும் பாதை எங்கும் அதன் தடத்தை
நுகரமுடியும்.இரு மருங்கிலும்
மரங்களின் பேச்சு கசகசக்க. அதுவே
வறட்சியில் சொல்லமுடிய
அவலம்.என்றும் விரிந்து, பரந்து ஓட
வாழ்த்துகிறேன் நீண்டு நெடுந்தூரம்
ஓடு ஓய்வு இல்லாமல் ஓடி பட்டி தொட்டி
நிறைய வாழ்த்துகிறேன்.

அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete