Wednesday, September 27, 2023

கூகுளுக்கு பிறந்த நாளா by Vidhya Nivash

 


கூகுளுக்கு பிறந்த நாளா !அதுவும்

 இருபத்திஐந்தா! 

இத்தனை காலமாக உன் வசம்

 நாங்கள் அடிமையா !!இல்ல இல்ல நீ

 தான் எங்கள் உயிர் நாடி.

எந்த பக்கம் திரும்பினாலும் கூகுள்

 கூகுள் ..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூகுள்

வாழ்த்தெல்லாம் இருக்கட்டும்!!

எனக்கும் வயசு ஆகுது .கொஞ்சம்

 பொறுமை இழக்குது. 

ஒரு நாளைக்கு இத்தனை முறை தான்

 என்னை கேள்வி கேட்க வேண்டும்

 அதுக்கு மேல கேட்டா நான் உங்கள

 கேள்வி கேட்பேன்.  இல்லன்னா நீங்க

 பணம் கட்டணும் வேறென்ன சும்ம

 சும்ம கேட்ட கேள்வியே கேட்டு

 கொஞ்சம் மண்டை குழம்புது .இதுல

 வேற நீங்க அடிக்கும் எழுத்த சேர்த்து

  அப்படியே நீங்க மனத்தில் இருப்பதை

 காட்ட வேண்டும் இல்லன்னா இந்த

 கூகுளுக்கு மூளையே இல்ல என்ற

 பெயரு.போதும் போதும் உங்க

 வாழ்த்துக்கள் என்னிடம் இருந்து

 எடுத்து எனக்கே வா!!


2 comments:

  1. அருமையான நகைச்சுவையோடு பிரசுரம் வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...