கீழ் வானம் மெல்ல சிவக்க கார்
மேகங்கள் விலக அடிவானம் எங்கும்
செவ்வானமாக பல இடங்களிலிருந்து
வந்த பறவைகள் போல ,பல மொழி
பேசி, பல கண்கள் காண தவமாக
காத்திருக்க அந்த விடியலில்
உதயமாகும் ஒற்றை சூரியனுக்காக
ஆனால் அவரோ அன்று,,
கண்ணாம்ப்பூச்சி ஆட்டம் காட்ட
மேகத்தில் மறைந்து மெல்ல
நடுவானில் வந்து நான்
வந்துவிட்டேன் என சிரிக்க. எதுவும்
நிரந்தரமில்லை ஆனாலும்
உதயமாகும் ஒவ்வொரு விடியலும்
புதுமை இனிமை. அந்த நேரத்தில் ஓர்
இடத்தில் பலர் ஒன்றிற்காக கூடி
இருப்பதே சிறப்பு .அதுவும் நாட்டின்
ஒரு கோடியில் நிற்பதே ஆசிர்வாதம்.


அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDeleteநீங்க தான சூரியனையே எழுப்புறீங்க செம போங்க
ReplyDeleteநன்றி😊
ReplyDelete