Wednesday, September 27, 2023

காரிருள் by Vidhya Nivash

 

 

காற்றை இழுத்து போனாய், வெயிலை

 அள்ளி குடித்தாய். எங்கே போனது

 வானத்து வண்ண ஓவியங்கள் துள்ளி

 திரிந்த பறவைகளும் உன் சத்தம்

 கேட்டு கூட்டை அடைந்தது . ஏன் வந்த

 வேகத்தில் கொட்ட வேண்டியது

 தானே.ஏன் இந்த மூட்டம்

 கார்மேகங்களே. எடுத்ததை திருப்பி

 கொடு வேறெங்கும் கடத்தி செல்லதே.

 இந்த மாலை வேளை பலரின்

 நம்பிக்கை அடுத்த நாளின் தொடக்கம்

 அதை விட்டுக்கொடு. இரவில் வந்து

 உறவாடு போர்வை விடுத்து உன்னை

 அள்ளி பூட்டிக்கொள்வேன் .

8 comments:

  1. இங்க மழை பெய்யாது என்ற தைரியத்துல மழையை கூப்பிடுறீங்க

    -- நன்று வித்யா

    அப்படியே நான் எழுதுனதையும் கொஞ்சம் படிச்சிட்டு போங்க

    ReplyDelete
  2. வறுமை
    -----------------

    கடற்கரையில்
    நிலவை பிட்டு
    மணலை தொட்டு
    பாவனையில்
    பசியாற்றிக் கொண்டிருந்தாள்
    சிறுமி

    --சின்னா

    ReplyDelete
    Replies
    1. அருமை உண்மை தோழரே.நன்றி🙏

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மழை வருகிறதோ இல்லையோ, மாலையில் தின்பண்டங்கள் தயார் மழையை எதிர் நோக்க. சிறப்பு வித்யா

    ReplyDelete
  5. Wow.. போர்வை விடுத்து..உன்னையே அணைத்து கொள்வேன்.. கடைசி வரிகள் ..ரம்மியம் 👌

    ReplyDelete
  6. நன்றி கிருத்திகா.
    அதை முதலில் இப்படி யோசித்தேன்
    "தலையணை விடுத்து உன்னை அள்ளிப்பூசி அனல் போன்ற வியர்வை தணிக்க வா"
    என்று முதலில் மழை மீது வந்த காதல் இடையில் மாலை பொழுதில் கடை போடுபவர் ஞாபகம் வர முடிந்தது வேற மாதிரி

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...