Tuesday, November 7, 2023

மலரும் கனவும் by Vidhya Nivash

 


மலர்கள் கேட்டது என்னை ஏன்

 பறித்தாய் என்று இதயம் கேட்டது

 உன்னை ஏன் ரசித்தேன் என்று 

தண்ணீர் கேட்டது என்னை ஏன்

 அடைத்தாய் என்று மௌனம் கேட்டது

 என்னை ஏன் களைத்தாய் என்று

 சத்தம் கேட்டது என்னை ஏன்

 அழைத்தாய் என்று தூக்கம் வந்தது

 கனவும் வந்தது மலர்கள் வந்தது

 வாசனை தந்தது இதயம் வந்தது

 ரசிக்க செய்தது தண்ணீர் வந்தது

 தாகம் தீர்த்தது மௌனம் வந்ததை

 சத்தம் கண்டது கனவு முடிந்தது. 




2 comments:

  1. படைத்த படைப்பை ஏன் படிக்க வைத்தாய் என்று காலம் கேட்டது, படைத்தவன் திறன் அறிய என்று மனம் சொன்னது.

    அருமையான கேள்வி பதில் வித்யா, அதுவும் கனவில் நடப்பது ஏன் என்று தொடருகிறது. அருமை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...