Saturday, April 8, 2023

வாயில் காவலன் by Vidhya Nivash



 காற்றை விட வேகமாக வரும் எண்ணத்தை யாரும் தடுக்கவும் வேணாம் பிடிக்கவும் வேணாம்

அதுவே வந்தது தெரியாமல் போகும்

அம்பை விட வேகமாக வரும் கோபத்தை யாரும் இடையில் மறித்தால் எப்படி இருக்கும்..

அது குத்தியவுடன் வலிக்காமல்  எடுக்கும் வித்தை அல்லது மறக்கும் மாய மந்திரம் இருந்தால்..

மீண்டும் அது வராமல் தடுக்க ஒரு காவலனை மனத்தில் நிறுத்த வேண்டுமோ

தொட்டவுடன் சுருங்கும் தொட்டாச்சிணுங்கி போல் வரும் கண்ணீரை பிடிக்க ஒரு வேடுவன் இருந்தால்..

பட்டென சொல்லும் குறை சட்டென சொல்ல வராத நிறையை வெளியே தள்ள ஆள் வேண்டுமோ

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...