பலரின் பள்ளிபருவ தோழி நீ.உன்
தித்திக்கும் தேன் சுவையை
கள்ளங்கபடம் இல்ல வயதில்
பருகியவர் பலர்.இன்றோ உன்
மருத்துவ குணம் அறிந்து தேடுபவர்
பலர்.நீயோ பார்க்குமிடம் எங்கும் பரவி
கிடைக்கிறாய் யாருமில்லா தடத்தில்
யார் வந்து அள்ளிப் பருக! வெண்
சங்கு போன்ற உன் மேனி அழகு
உள்ளம் கவருதே.பெண்ணின்
மூக்குத்தி போல் செடியின்
இருமருங்கிலும் பொருந்திய
அழகு.ஆவியில் அவிக்கும் இட்லிக்கு
உன் புகழ் உண்டு.இவள் பெயர்
சொல்லுங்க தோழிகளே?

விடை தெரியா பூவும் மதுறத்தின் வழியே அழகே வித்யா
ReplyDeleteஆம்.இது தும்பைப் பூ
ReplyDelete