Wednesday, August 2, 2023

எதில் திருப்தி by Veena Shankar



 எதில் திருப்தி


சாதம் நன்றாக குழையவில்லை


பருப்பிற்கு நெய் விடவில்லை


ரசத்தில் காரம் இல்லை


பருப்பு குழம்பில் உப்பு இல்லை


மோர்குழம்பில் தேங்காய் போதவில்லை 


வத்தகுழம்பில் சுண்டைக்காய் நிறைவாய் இல்லை


பொரியலில் கடுகு பொரியவில்லை


உசிலி நன்றாக வேகவில்லை


அரைத்துவிட்ட குழம்பில் மசாலா காணவில்லை


காரக்குழம்பில் நிறம் இல்லை


புளிக்குழம்பில் புளிப்பு போதவில்லை


துவையல் சரியாக அரைபடவில்லை


அவியலில் மணம் இல்லை


கூட்டில் காய் பொருத்தமாய் இல்லை


சித்ரான்னத்தில் வேர்க்கடலை போடவில்லை


எதிலும் கொத்தமல்லி வாடையில்லை


இனிப்பை வாயில் வைக்க முடியவில்லை


வடையில் அதன் வடிவமில்லை


பாயசத்தில் இனிப்பு தெரியவில்லை


அப்பம் மிருதுவாக இல்லை


அப்பளம் பெரியதாக இல்லை


வடகம் நன்றாக வருபடவில்லை


மோர் மிளகாய் கறுக்கவில்லை


தயிர் கெட்டியாக உறையவில்லை


முதலில் சாப்பிட வாழைப்பழமும் இல்லை


நிறைவாய் குடிக்க தண்ணீரும் ருசிக்கவில்லை


என்று சொல்ல எனக்கு வாய்ப்பில்லை. 

எதிலும் திருப்தியே கல்யாண சாப்பாட்டில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...