நலம் அறிய ஆவல்
"என்னப்பா இப்படி வாடி போய் இருக்கிற? காலையில ஏதும் ஊற்றி கொண்டாயா? நிழல்ல போய் உட்கார்ந்துக்கோன்னு உன்னை சொல்லவும் முடியல. மழையும் பெய்யமாட்டேங்குது. நீயும் எவ்வளவு நாள் இந்த வெயிலை சமாளிப்ப? நான் ஊருக்கு போயிட்டு வரேன்னு உன்கிட்ட முதலிலேயே சொல்லியிருந்தேன். ஆனாலும் நீ என்னை எதிர்பார்த்து காத்து கொண்டே இருந்தா இப்படி தான் சோர்வு தரும். சரி நான் உனக்கு தேவையானபோது தாகத்துக்கு தண்ணி கொடுக்க சொல்லி நம்ம ராமுகிட்டே சொல்லிட்டு போயிருந்தேன். அவன் எப்படி, உன்னை நல்லா பார்த்துகிட்டானா? எனக்கு னனு இருந்த ஒன்று இரண்டு பழத்தையும் கொண்டு போயிட்டான்? நீயும் பார்த்துட்டே சும்மா இருந்திட்டியா? இன்னிக்கி பஸ் விட்டு இறங்கும் போது அவன் பொண்ணு கையில இருந்தது வச்சி கண்டுபிடிச்சேன். வரட்டும் அவனை பார்த்து நாலு வார்த்தை கேட்கணும். உன்னையும் சரியாகவே கவனிக்காம போட்டுருக்கான் " என்று தன் நீண்ட வசனத்தையும் வருத்தத்தையும் தன் தோட்டத்தை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தான் தோட்டக்காரன் முனியசாமி.

No comments:
Post a Comment