Thursday, August 24, 2023

பச்சை விளக்கின் மாற்றம் by Veena Shankar

 


பச்சை விளக்கில் வளர்ந்த பச்சை

 கொடிகள்


சிறு ஒளி கூட போதும் இருளை போக்க

பசுமை வளர்க்க


சந்திரன் இல்லா இடத்தில் இரவு

 விளக்கும் ஒளி கொடுக்க, 

அந்நேரம் பக்கம் இருந்த கொடியும் படர

 இடம் தேட ,

அந்த விளக்கு ஒளியே கொடியின்

 பேச்சுக்கு செவி கொடுக்க 

கொடியும் விளக்கில் ஒய்யாரமாய்

 நிதமும் படர, அந்த விளக்கு ஒளியும்

 மங்கியது

தன் நிலை மறந்து. இருட்டை நீக்கிய

 விளக்கு இன்று காணாமற் போனது

 கொடியின் ஆழ்ந்த பிரவேசத்தால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...