Tuesday, August 29, 2023

மீண்டும் சந்தித்தல் by Vidhya Nivash

 


நகர்ப்புறத்திலிருந்து கொஞ்சம் தள்ளி

 வண்டி ஓட்டுநருக்கே தெரியாத ஒரு

 இடம்.எந்த எதிர்பார்ப்பும் இல்லை

 ஓய்வுக்காக கூடே சென்றோம்.அங்கு

 தான் ஒரு அற்புதமான புல்லரித்த

 அனுபவம் கிடைத்து.

திருமணத்திற்கு வரும் சொந்தம்

 போல் ஒருவரை ஒருவர் வரவேற்க

 பலர் வழியில் சேர்ந்து ஒன்றாக வர

 வாசலில் பதாகையுடன் ஆரம்பமே

 அசத்தல்.

 மீண்டும் சந்தித்தல் ஆம் இருபத்தி

 இரண்டு ஆண்டுகள் கழித்து.இது

 கணவருடைய நண்பர்கள் சந்திப்பு

 என்றாலும் குடும்பத்துடன் பலரும் ,

 தனியாக பெண்கள் பலரும்

 விமானத்திலும், தொலை

தூரத்திலிருந்து ரயிலிலும்

 வந்து இருந்தது ஆச்சரியமாக,

 சந்தோஷமாகவும் இருந்தது.அதிலும்

 ஒரு சிலரே தொடர்பில் இருந்தாலும்

 ஐந்து பேரை தவிர அனைவரும் வந்து

 இருந்தனர்.அப்பா அசந்து போனோம்

 ஒவ்வொருவரும் எங்கு விட்டு

 சென்றார்களோ அதே இளமை

 துடிப்பு,பாசம் இன்னும் அதிகமான

 நட்பு ....கொஞ்சம் பொறாமையாக

 இருந்தது.செல்ல பெயரை அழைத்து

 நீ அப்படியே தான் இருக்க என்று மாறி

 மாறி சொல்லி துணையாக போன

 எங்களுக்கும் நல்ல வரவேற்பு அதில்

 ஐக்கியம்.


குழந்தைகளுக்கும் ஒரு

 புதுவித நட்பை உருவாக்கி

 தந்தது.ஒவ்வொருவரும் தங்களுடைய

 அனுபவங்களை சொல்லும் போது

 கற்ற வாழ்க்கை பாடங்கள் பல.படி

 படியாக ஏறிய முன்னேற்றங்கள்.

வாழ்க்கை வட்டத்தில் மேலும் கீழுமாக

 வந்த சுழற்சி.அமைதியாக இருந்த

 பெண்கள் வாய் திறந்தவுடன் வாய்

 மேல் கைவைக்கும் அளவுக்கு அரசு

 பணியில்,தனியார் பணியில் பல

 வெற்றிகள்.கடைசியாக ஓடி ஓடி

 போதும் இருப்பது போதும் என்ற

 பலரின் மனமும்..அருமை.பலரின்

 கூட்டு முயற்சியால் வந்த பலரும் எந்த

 வித்தியாசமும் இல்லாமல் ஓரே

 கோட்டில்,வெகுநாள் கழித்து

 தோழிகளை கண்டு விடைபிரிய

 முடியாமல் துடிக்க.  குழந்தைகளுடன்

 வந்ததே பிற தோழிகளால் இங்கு

 கூண்டு பறவை சில நேரம் சுதந்திர

 காற்றை சுவாசிக்க என சிலரும். 

பல நாடு,ஊர்களிலிருந்து வந்து

 பரிமாறப்பட்ட,இனிப்புகள் 

தின்பண்டங்கள் ஆஹா.


மறுநாள் அரசு கல்லூரி

 இன்னும் மாறாத அதே வகுப்பறை

 பெஞ்சுகளுடன் வரவேற்க.சின்ன

 குழந்தைகள் போல் அப்பாவும்,

 அம்மாவும் தங்கள் பிள்ளைகளுக்கு

 சுற்றிகாட்ட..அங்கோ மறுபுறம் 80 ல்

 படித்தவர்கள் இளமை திருப்புதே

 என்று சுத்தி வந்தனர்.இதில்

 கல்லூரியில் பல்துறை தோழர்கள்

 வேறு ஒருபக்கம்.கடைசியாக வந்த

 தருணம் ஐந்து வயது பையன் பதின்

 பையனுடன் நானும் போறேன் அம்மா

 என்றும் ,கிளம்பபோறோம் என்றவுடன்

 சுருங்கிய பிஞ்சு முகங்கள் ,சுற்றி

 சுற்றி நான் வரமாட்டேன்

 என்றும்.எப்படி வந்தது இந்த பாசம்

 என்று வண்டியில் பயணிக்கும் போது

 நமக்கும் மனம் வீட்டுக்கா !சொல்ல

 முடியாத ஒரு பிணைப்பு.பலரின்

 முயற்சியால், இரு மாதங்களாக

 தூங்காமல் செய்த முயற்சியில்

 நடந்த அற்புதம்.


 நம்முடையதை திரும்பி பார்த்தால் பல

 பக்கங்களை காணோம் .கடைசியாய்

 உலகில் யார் எந்த மூலையில் எப்படி

 இருந்தாலும் மண்ணின் இயல்பு

 மாறாதது என்பதற்கு நம் குழந்தைகள்

 சாட்சி. 



2 comments:

  1. அருமையான என்றும் பசுமையான நினைவுகள் நம் பள்ளி, கல்லூரி காலங்கள். அருமையான பதிவும் கூட. ஒரு சில வருடங்களுக்கு முன் என் கணவர் ஒன்றிணைத்து நடத்திய மாபெரும் நிகழ்ச்சியின் கண் முன் நிழலாடியது. எல்லோரும் என்னவரை பார்த்து கேட்ட கேள்வி எப்படி இத்தனை (ஆயிரங்கள்) பேரை ஒன்றினைத்தாய் என்பதும் செவியில் ஒலிக்கிறது. உபயம் கையடக்க அலைபேசி என்றாலும் மெய்யடைக்க பதிந்தவருக்கு நன்றிகள் பல. வியந்து போஎனேன்.

    அருமை வித்யா

    ReplyDelete
  2. உண்மை வீணா.கேட்கவே அருமை.முயற்சி என்றுமே வெற்றி

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...