Sunday, August 27, 2023

புகைப்பட தினம் by Veena Shankar

 



 புகைப்பட தினமே! 


எண்ணத்தின் வழியே பிறக்கும் வண்ணப் படம் அதுவே புகைப்படம்.


எடுப்பவர் யாரோ அவரின் திறமை வெளிப்படும் நேரம் நிகழ்ச்சியின் நன்னேரம் 


பிடித்த காட்சியும்

பிடிக்காத சம்பவங்களும்


தெரிந்த கலையும் பிறருக்கு தெரியாத வகையும் 


சிறந்த தருணங்களும் பின்னாளில் சிந்திக்க வைக்கும் நினைவுகளும்


தற்காலிக மகிழ்ச்சியும் தன்னிகரில்லா ஆனந்தமும் தன்னகத்தே கொண்டாலும் 


எடுத்து கொள்பவர் வாழ்வில் ஓர் வசந்தமாய் 

அதுவும் புது வசந்தமாய் மாறும் வேளையும் 


மீட்டு கொடுக்கும் நினைவலைகளும் மீளா துயரிலும் 


மீண்டு வந்து எடுக்கும் மனமும் அதை பிறர் ரசிக்க அதை உருமாற்றி கொடுக்கும் ஆற்றலும் 


உன்னில் எத்தனை மாற்றங்களை கொண்டாய் 

காலமும் பிரித்து பார்க்கவில்லை உன் வளர்ச்சியை


அதனூடே வளர்ந்தாலும் உன் அசுர வளர்ச்சியில் வான் போல் நிற்கிறாய் 


விளம்பரமில்லாமல் உன்னை ரசிக்க வைக்கும் தன்மையும் உண்டே!


அதுவும் நீயே! 


நீயல்லாது மாற்று வழி அறிந்திலேன்,


இந்நாளில் இந்த புகைப்பட தினத்திற்கான நன்னாளில் 


மெய் சிலிர்க்க வைத்து என்னை எழுத தூண்டிய உன் அருமையை என்றும் மறவாத 


உன்னை எந்நாளும் விரும்பும் நான் என்பவள் உன்னை ரசித்து போற்றும் மக்கள் கூட்டத்தில் ஒருத்தி


புகைப்பட தினமே! வா ! வா ! வசந்தத்தை காட்ட


 (அகில புகைப்பட தினத்திற்காக எழுதியது 17 th August)




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...