Saturday, August 26, 2023

கள்ளிப்பூ by Vidhya Nivash

 


கள்ளிச்செடி பார்த்திருக்கிறேன்

 முதன்முறையாக கள்ளிப்பூ கண்ணில்

 பட்டது.

யாருமில்லா கரடு மேட்டில்

 பூத்து நின்ற கள்ளியே

 பார்ப்போர் மனதை கொள்ளை

 கொள்ளும் கள்ளியே

 கள்ளங்கபடமில்லா வெள்ளை நிறம்

 கொண்ட கள்ளியே

 வருடத்திற்கு ஒரு முறை இரவில்

 மட்டுமே மலர்ந்து மாலையில்

 மயங்கும் கள்ளியே 

உன் தரிசனம் கிடைத்ததால் அகமுகம்

 புறமுகம் மலர்ந்தது கள்ளியே




2 comments:

  1. இந்த படத்தில் தான் முதன் முதலாக பார்க்கிறேன். நன்றி வித்யா

    ReplyDelete
  2. உண்மை.நகர்ப்புற மக்களுக்கு அரிது

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...