நேர்கொண்ட பார்வையில் கால்
அடியில் விரிந்து கிடந்த பூ
மெத்தையை மறந்து செல்ல.அதன்
வண்ண உடல் என்னை சுண்டி இழுக்க
அதன் மயக்கத்தில் செல்லும் வழியில்
சட்டென நிமிர்ந்தால் நெடுநெடுவென
வானை தொட ஏணி இல்லாமல் ஏறும்
ஒற்றை சுந்தரி.வளைவு நெளிவு
இல்லாமல் நேராக நிற்கிறாள் யார்
துணையும் தேவையில்லை என்றோ.
ஆனாலும் உன் வெள்ளை முகம்
மட்டும் ஏன் வெட்கத்தில் தலைகுனிய..
மண்ணை ரசிக்கவா இல்லை
மன்னனை மண்ணில் தேடுகிறாயோ!

No comments:
Post a Comment