Thursday, August 10, 2023

இந்த வாரத்தலைப்பு "வளையல்" by Veena Shankar

  


அழகான வண்ணங்களில் 


எவர் அணிந்தாலும் உடன் இசைக்கும் கண்ணாடி வளையல்கள் 


ஏழைகளின் கரங்களுக்கு அழகு பிளாஸ்டிக் வளையல்கள்


மங்கையர் அணிய விருப்பம் கொள்ளும் தங்க வளையல்கள்


ராசியுள்ளவர்கள் அணியும் வைர வளையல்கள்


 வசதியின் நிலையை காட்டும் பிளாட்டினம் வளையல்கள்


வளையல்


வளைந்து கொடுத்தாலும் நீ உறுதியானவள்


நெளிந்து போனாலும் சாமானியத்தில் உடையாதவள்


பல வண்ணங்களில் கரங்கள் பூட்டி நின்றாலும் சுமையாகாதவள்


கருவறையில் இருக்கும் போதே நீ எங்களுக்கு பழகி போனவள்


வளையல் சிந்தனை


தக தக வென்று தகிக்கும் வெயிலென்று பாராமல்


குடு குடு வென்று ஒரு ஜோடி வளையல் வாங்க சென்றேன் கடைத்தெருவிற்கு


கூவி கூவி விற்ற வளையல் கடைக்குள் 


கட கட வென்று உள்ளே நுழைந்தேன்


பள பள வென்று அங்கே சிரித்தது கண்ணாடி வளைகள்


பல பல வண்ணங்களுடன் என் நெஞ்சை கவர


கிளு கிளுlப்பானது தருணம் ஆசையில்


கல கல வென்ற சத்தத்துடன் கீதம் பாடியது என் காதினுள்


சட சட வென விழுந்த சாரலில் நனைவது போல் உணர்ந்தேன்


மள மள வென வாங்கி குவித்தேன் அளவுக்கு மீறி


சில சில அடுக்குகள் வாங்கி அப்போதே அணிந்து மகிழ்ந்தேன்


மெல்ல மெல்ல நகர்ந்து நான் செல்ல


குபு கூபு என்றொரு கூட்டம் என்னை 


மட மட வென்று பின் தள்ள மிரண்டேன்


கிசு கிசு வென்று ஏதோ அவர்கள் காதில் சொல்லி கொள்ள


குறு குறு பார்வையால் மேலும் என்னை பார்க்க 


சிடு சிடு வென நான் அவர்களை பார்த்து முகம் சிவந்தேன் 


கம கமக்கும் பருப்பு வடை போல 


சுட சுட விற்றுப் போனது புது வரவு வளைகள் தேர் வீதியிலே


 பெருமிதம் கொண்டேன் நானும் முந்தியடித்து வாங்கியதற்காக

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...