Sunday, August 20, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 



மரத்தாலான உடம்பும் மறுத்து போன காளையும் 


அதிக உழைப்பால்

வலுவிழந்தது சூறாவளி கடலிலும், காளையும்


ஓடும் போது தெரியாத அலுப்பு, நிற்கும் போது தெரியும் நிழலாய்


மரம் விற்ற காசில் மாடு வாங்கினேன். மாடு சுமந்து தந்த காசில் வாழ்வை வளமாக்கினேன். இப்போது நிழலுக்கு மரமும் இல்லை, சுமக்க மாடும் இல்லை.  


பிராணி வதை சட்டத்தில் கம்பியும் எண்ணினேன்.  


நான் கொண்டிருந்த மாட்டு வண்டியை

பொருட்காட்சியில் வைத்தேன், அது உழைக்கவில்லை என்பதால்


உழைப்பிற்கான ஊதியம் எதுவோ?


அச்சம் கொள்கிறேன் இப்போது நானும் என் சந்ததியரால் பொருட்காட்சியில் வைக்கப்படுவேனோ என்று? என் உழைப்பை கொடுக்க முடியாததால். 


காலம் பதில் சொல்லும் வேளையில் நான் காலனின் பிடியில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...