Tuesday, August 15, 2023

ஒலியும் பொருளும் by Veena Shankar

 


ஒலியும் பொருளும் 


(நண்பரின் விருப்பத்திற்காக எழுதியது)


குலம் பார்க்க முடியாது கண்கள் குளமாகும் போது


மரம் போல் நிற்க முடியாது மறம் வெற்றி கொள்ளும் போது 


குரல் கொடுக்க தேவையில்லை குறள் வழி நிற்கும் போது 


தாழ்மை தேவையில்லை தாள் பற்றி இருக்கும் போது


ஏறி மிதிப்பது சிறப்பில்லை ஏரி வற்றும் போது 


தளம் வெறுமையில்லை அது கடவுள் தலமாகும் போது


சூல் கொண்ட மலர் வனப்பு இழப்பதில்லை தேனீக்கள் சூழ் கொள்ளும் போது


விழையும் விலையில் வீழ்ச்சியில்லை விளைந்த பயிரின் தன்மை மேன்மை கொள்ளும் போது 


உலவுகின்ற மனம்

உளவு சொல்வதில்லை உழவில் நம்பிக்கை வைக்கும் போது


வாள் என்றுமே வாழ் இழப்பதில்லை தன் வால் அடக்கி வைக்கும் போது 


கிழிவதில்லை வார்த்தைகள் 

கிளிப் பிள்ளை பேச்சில் கிலியடையும் போது 


ஒளி எழுப்பாது வரும் ஒலி நம்மை ஒழித்த போதும்


மறப்போம் மறவன் வழியில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...