Wednesday, August 23, 2023

வரலாற்று சாதனை by Vidhya Nivash

 


நிலவொளியில் மின்னும் மண்ணும்

 அதற்கு இணையாக கம்பீரமாக

 நிற்கும் ராஜராஜ சோழர் இல்லை

 இல்லை ஒவ்வொரு கல்லாக, உடலே

 உளியாக செதுக்கி அடுக்கிய பலரின்

 வியர்வை துளிகள் சேர்ந்து

 மிளிர்கிறதோ. உடையாரை படித்த

 பிறகு பெரிய கோயிலின்

 நுழைவாயிலை மிதிக்கும் போதே

 மேலிருந்து ராஜராஜ சோழரும்,

 துணைவியாரும் வரவேற்ப்பது போல்

 உணர்வு.



பல வருடங்கள் கழித்தும் இன்றும்

 பேசப்படும் வரலாறு போல் நேற்றைய

 ISRO வின் சாதனையான சந்திரயான்

 மூன்றின் வெற்றி பொன்

 எழுத்துக்களால் பொறிக்கப்பட

 வேண்டிய ஒன்று.இதன் வெற்றிக்கு

 காரணமான ஒவ்வொருவருக்கும்

 வாழ்த்துக்கள் பல அவர்களுடைய

 வியர்வையே இன்று நிலவில்

 கம்பீரமாக மிளிர்கிறது.



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...