Friday, August 11, 2023

இந்த வாரத்தலைப்பு "வளையல்" by Vidhya Nivash

 


சின்னஞ்சிறு  வட்டத்திற்குள்ளே

 உலகம் .அதற்குள்ளாக அனு தினமும்

 கழிக்க பழக்கப்பட, வட்டத்தை

 தாண்டினால் உடையும் வளையல்

 இல்லை பழக்கம், குத்தும் ,

 காயமாகும் ஆனால் வலிக்காத மாதிரி

 இருக்கவேண்டும். அதற்குள்ளே

 இருக்க மட்டுமே அனுமதி தேவைக்கு

 மட்டும் கைநீண்டு வந்தால் போதும்

 என்பதே நியதி இதை நினைத்தோ

 பெண்ணுக்கு பூட்டினார் வளையல்

 அன்று. இன்றோ முதலில் மாறிய

 வடிவம்,யார் வேண்டுமானும்

 அணியலாம் எங்கு வேண்டுமானலும்

 கைகளுக்கு மட்டுமல்ல..


வண்ண வண்ண வளையல்

 பார்த்தவுடனே கையில் பூட்டிப்பார்த்து

 விடுவோம்.யார் அனுமதியும்

 கேட்காமலே.கொஞ்சும் வளையல்

 கைகள் ஏங்க கடைகளை அலங்கரிக்க

 தொங்குவதென்ன.. அனு தினமும்

 உன் வண்ணம் மனதை

 கொள்ளையடிக்க ..நீ கையில் தவழும்

 நாளுக்காக சிறுக சிறுக

 வியர்வையின் கூலியை சேமித்து

 வருகிறேன்.


பல காலமாக கையில் குடிக்கொண்ட

 வளையலை அவள் கைகள்

 வலிக்காமல் வெட்டி எடுங்கள் என்று

 தவிக்கும் குரல் இடுகாட்டில்..


2 comments:

  1. கடைசி வரிகள் அழுத்தம் மற்றும் உண்மை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...