Saturday, August 26, 2023

களைப்பும் களிப்பும் by Veena Shankar

 


பின் வைக்கும் காலை முன் வைக்கும் போது முன்னேற்றமே அன்றி வேறில்லை


இரண்டு பக்கங்களிலும் பயணித்தாலும் காட்சி ஒன்று தான். பார்வை மட்டுமே வேறு


முயற்சியின் வெற்றியால் முன்னேறும் பாதை சமதளம்


கடந்து பாதையை பின்னே பார்த்தால் அது வெறும் கல்லும் மண்ணும் தான்


ஊராரின் பார்வையோடு ஒத்து போக நம் பார்வையும் சுழல வேண்டும் எல்லா பக்கமும்


தன் சக்தியை காலால் மிதித்து வாழ்க்கையை முன்னேற்ற செய்யும் தந்தையின் தியாகத்தால் களிப்புடன் வானத்தை ரசிக்கும் சிறுவன்


களைப்பும் களிப்பும் ஒரு சேர்ந்த இடம், இந்த படம்.


எல்லையை தொட்ட மகிழ்ச்சியில் ஒருவர் முகம் மறைத்து 

எல்லையை தொட நினைக்கும் மற்றொருவர் உலகிற்கு தன் முகம் காட்ட

செல்லும் பாதையும் பயணமும் ஒன்றானாலும் இலக்கு வெவ்வேறு தான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...