சதியும் பதியும்
ஒய்யார நடை நடந்து ஓரிடத்தில் சதி அமர, ஊர் சுற்றி வந்த களைப்பில் சதியின் மடியில் பதி, சாய்ந்து நித்திரையில் விழ, தன் அரிதாரைத்தை கலைக்க எண்ணிய வேளையில் பதியின் குறட்டை சத்தம் சதியின் செவியை அடைக்க, என் செய்வது என்று தெரியாமல் சதி முழிக்க, தான் முழிப்புடன் இருந்தால் சதி தன்னை விட்டு செல்வாளோ என்று நினைத்தே காதல் பேச காத்திருந்த பதி, தான் துயில் கொண்டது போல் நடிக்க, பதியின் குறட்டை சத்தம் வெறும் நடிப்பு , காதல் செய்யும் லீலை என சதி பின் உணர, பதியை எழுப்ப ஆலோசனை செய்ய, யோசனை உதித்ததும் தன் பதிக்கு அலைபேசி அழைப்பு வருவதாக சொல்லி துயிலெழுப்ப முயல, அது பதியின் செவியில் விழாமல் போக, நித்திரையில் இருப்பவரை எழுப்பலாம், நித்திரை கொண்டவர் போல் நடிப்பவரை எழுப்பவது கடினமே என்று அறிந்து தெளிந்து கொண்ட சதி, இது தான் தருணம் தன் நகையை கைப்பற்ற என்றெண்ணி ஆடித்திருவிழாவில் தொலைந்து போன தன் நகை கிடைத்து விட்டதாக பதியிடம் சொல்ல, தன்னையறியாமல் சட்டென்று எழுந்த பதி , சதியை கேள்விக்குறியாய் பார்க்க, சதிக்கு தெரியாமல் தான் தன் காதலிக்கு கொடுத்த நகை இவள் கையில் எப்படி வந்தது என்று பதி யோசிக்க, சதியின் நகையை பதி தான் ஒளித்து வைத்திருக்கிறார் என்று நினைத்த சதிக்கு, விடையாவது யாது?
இங்கே வெல்வது சதியின் சதியா? பதியின் பதிலா?

No comments:
Post a Comment