நேற்றிருந்த காற்றை காணோம்
மலரை மொய்த்த வண்டை காணோம்
வட்டமிட்டு பறக்கும் பட்டாம்ப்பபூச்சியை
காணோம் தேனையும் காணோம்
பாலையும் காணோம்
பலாச்சுளையிலிருந்து வடியும் தேனை
அருந்த ஆளை காணோம்
பூத்துக்குலுங்கும் மலரை தீண்டவும்
தேனீக் கூட்டத்தை காணோம்
சட்டியில் கூட்டுக்கறி ஊரை இழுக்க
நெல்லரசி உலையில் கொதிக்க
கடைந்த மோர் வெண்ணெய் ததும்ப
போட்டது போட்டப்படி கிடக்க எங்கே
போனாள் அன்னம் அவளை
காணாமல் நின்றதோ அனைத்தும்

ஆஹா அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete