Sunday, August 6, 2023

இளித்து இளைத்தவள் by Veena Shankar

 


இளித்து இளைத்தவள் 



ஆளில்லா வேளையில்

பளிங்கு மேனியால், 

ஒளிரும் கண்களால்,

தெளிந்த பேச்சால்,

என்னை கவர்ந்த அவள்



புளித்து போன வாழ்வில்

குளிர் கால தென்றலாய்

வளியின் தீண்டலாய்

வடிவம் கொண்டாள்



தளிர்த்த ஆசையில்

துளிர்விட்ட காதலில்

நான் இருந்த தருணத்தில்



தூளியில் ஆட்டியும்

கேளிக்கை செய்தும்

விளித்து மகிழ்ந்தும் 

மிளிர்ந்த மனதால்

ஒளித்து வைத்த அழகால்

களித்த தருணமும்



சுளிக்கும் முகமுமல்ல

மூளியுமல்ல பார்வையில்

தாளிக்கும் மணம் சிறுமை கொள்ளும் அவள் முன்



உளியின் கூர்மையானாலும்

காளியின் தோற்றமல்ல அவள்

மெதுவாய் என் கட்டுக்குள் வர

அளித்தாள் எனக்கு உயிர் மூச்சு



வெளியில் விண்வெளியில் இறங்கினோம்



துளித்துளியாய் காதல் பரிமாற

தோளில் சாய்ந்தும் 

குளித்தெழுந்த இன்பத்தில்

நெளிந்த தேகத்தின் பலனாய் முத்துவும் கிடைத்தது 



இளித்து இளைத்தவளும் அவளோ?

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...