Monday, August 28, 2023

சிந்திக்க by Vidhya Nivash

 


 பூத்துக்குலுங்கும் மலரை கேட்டேன்

 அது பேசவில்லை சுற்றியுள்ள

 மலைத்தொடர்களை கேட்டேன்

 அதுவும் பேசவில்லை ஏன் காற்றையும்

 கேட்டேன் அதுவும் பேசவில்லை சுற்றி

 திரிந்த வண்டை கேட்டேன் அதுவும்

 பேசவில்லை கடைசியாக

 குழந்தையை கேட்டேன் காதிலிருக்கும்

 அடைப்பை எடுத்து சொன்னது இதை

 வைத்துக் கொண்டு எதை கேட்டாலும்

 கேட்காது.சுற்றியுள்ள அனைத்தும்

 சிரிப்பது போல் இருந்தது.


2 comments:

  1. சில நேரங்களில் இப்படித்தான் சுற்றியுள்ளவை நம்மை பார்த்து சிரிக்கும். ஆனாலும் மனதிலும் முகத்திலும் ஆனந்தம் பொங்கும் நம்மை மறந்து. அருமை வித்யா

    ReplyDelete
  2. உண்மை நன்றி வீணா😊

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...