Friday, March 15, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் கைப்பிடியில்


அதை எதிர்த்து வருவதும் 

வேண்டாம் என்று விலகி நிற்பதும்

அவரவர் மனநிலை பொறுத்து


 கை விரல்கள் மடிந்த பின்னும்

ஓய்வு தேவையில்லை

சிரசை தூக்கி விரசாய் நடக்க பாரும் நம்மை திரும்பி பார்க்கும்


(கால்) நடையும் (சொல்) நடையும் 

அவசியம் பாரை வசமாக்க


ஏதும் சொல்லாமல் மனம் , சிரம் அமைதி காத்தால்

விரல்களும் பலம் இழக்கும்


 கை ரேகைகளும் படிந்தது நெருக்கமாய்

அவன் காதல் போலே


 உன்னில் என்னை புதைத்தேனா?

விளங்கவில்லை எனக்கு

உன்னில் புதைந்திருந்தால் 

வீரம் கொண்டிருப்பேன்

மமதை கொண்டிருப்பேன்

உன்னில் நான் அடக்கமானதும் 

உந்தன் வெற்றியோ?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...