Monday, March 4, 2024

சோகம் by Veena Shankar

 


சோகம்


என் விழியிலிருந்து கண்ணீர் வழியாவிட்டாலும்


என் செயல் கண்டு என் நிலையை புரிந்து கொள்ளும் மனது தான் சொர்க்கம் என நான் எண்ணியிருந்தேனே?.


இனிப்பின் சுவை திகட்டவும் செய்கிறது என் கண் முன்னே


காண்பவை யாவும் நிரந்தரமல்ல


இணைப்பின் வாசல் தெரியாவிட்டாலும் இறுதி என்பது உறுதியாகாது என்றும் பிரிவில்


தன்னைத்தானே வருத்திக் கொண்டு மனம் நொந்தாலும் அதிலும் வாராது திருப்தி 

காலம் முடியும் வரை


பிறகு ஏன் இந்த சோகம் என்னுள்?  


கிடைப்பது கிடைக்கும் என்றாலும் 

கிடைப்பது யாவுமே எனை வருத்தும் செயலாய் மாறுவதேனோ?


என் சோகத்திற்கு நானே பொறுப்பானாலும் வாழ்க்கையும் 

வெறுத்துப் போவதேன்?


புரியாமல் தவிக்கிறது என் மனம்


எது சரி?

எது தவறு?

எது உண்மை? 

எது பகட்டு?

எது நிரந்தரம்?

எது சுதந்திரம்?

எது தந்திரம்?

எது மந்திரம்?

எது நம்பிக்கை?

எது மகிழ்ச்சி?


சொல்லும் ஓர் மனம் தேடி என் மனம் அலைபாயுவதேன்?


என் நெஞ்ச சோகம் தேடுகிறது 


அமைதியான தென்றலை தேடி


இளைப்பாற ஓர் மரத்தின் நிழலை தேடி


இனிமையான ஓர் வார்த்தையை தேடி


ஒற்றை சொல்லும் என் சோகத்தை கொல்லாதோ? என்ற நினைப்பில் அடிக்கடி

என்னை நானே

 வருந்தி நிற்கும் மூடன் நான்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...