Monday, March 18, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


சுகமான சுமைகள்! துள்ளித்திரிந்த காலத்தில் தள்ளி இருக்கும் துணை தள்ளாடும் வயதில் கிட்ட இருந்தால் போதும்...


உணர்வால் இணைந்த காலத்தில் இருப்பு தேவையில்லை உணர்ச்சி வசப்பட்ட காலத்தில் உடன் இருக்க தேடும் ஓர் உறவு...


நிலையில்லா உலகில் நிலைத்து இருக்கும் ஓர் உறவு...


அவளுக்கு முன் நான் என்றும் ,அவருக்கு முன் நான் என்றும் நாளை ஓட்டும் முதுமை..


முதுமையில் உறவாடும் தோழமையும்,தாய்மையும் கிடைக்கப் பெற்றால் பெறும் பாக்கியம் .அதுவும் நம் கையிலே..


ஒன்றில் ஒன்று பிரிந்தால் பொம்மையாகி போகிறது.இதை நன்கு புரிந்தே பிரிக்கும் இரண்டு, உயிரற்ற நிலையில் காலம்.


மற்றொன்று உயிருள்ள நிலையில் பிள்ளைகள்.


பட்டும்,பூவும்,நகையும் தேவையில்லை..

தன்னலமற்று ஓடிய உடலுக்கும் ,மனத்திற்கும் பசிக்கு உணவும் ஓய்வுக்கு நிழலும் தந்தால் போதும்.. 

இறந்த பின் அறுசுவை படைக்க தேவையில்லை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...