Sunday, March 17, 2024

பெண்ணே! என் நிழலே! by Veena Shankar

 


பெண்ணே! என் நிழலே!


என் நாவு என் ஆவல் சொல்லும் முன்னே பெண்ணே! ஆதரவாய் என் கரங்கள் பற்றி ஆவண செய்வாயே!


சமைக்கும் போது என் நாவின் சுவை கூட்ட அதை சுவைத்த பின்னே பெண்ணே! எனக்கு பசியாற்றினாயே! 


பெரும்பாடு பட்டு அடைந்த பிள்ளை செல்வங்களும் தன்னிச்சை வாழ்வு கொள்ள பெண்ணே! நீ எனக்கு கரம் பற்றி ஆறுதல் மொழிந்தாயே!


உன் மடி சாய்ந்து நான் துயில் கொள்ள உனக்கு சாகா வரம் வேண்டும் என்று நான் நினைத்திருந்த வேளையில் என்னை மட்டும் புறந்தள்ளி பெண்ணே! நீ முன் சென்றாயே! 


நான் முதலில் உயிர் விட்டால் மேலுலகத்தில் சிரமப்படுவேன் என்று நீ நினைத்து என் வசதிக்காக பெண்ணே ! நீ அவசரமாய் அங்கே அடைந்தாயே!


இனி வார்த்தைகள் இல்லையடி பெண்ணே! என் வாழ்வுதனில் உன் புகழ் பாட!


சரிபாதி என்று உரைத்து என் உடல் சரியில்லாத நேரத்தில் பிரிந்து என்னை பெண்ணே! பாதியாக்கினாயே!


பரிவிற்கும் புரிதலுக்கும் பெண்ணே ! நீயில்லாத நான் மட்டும் எங்கு செல்வேன்?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...