Saturday, March 2, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


பாளம் பாளமாய் வெடித்த கோடுகள் தான் அவள் முகத்தில் 

செயலற்ற வைக்கும் கோடுகள்


 தன்னை மறைக்க அவள் போட்ட வண்ணங்கள் பகையாகியது அவள் உண்மை முகத்திற்கு வெகுமதி பெறாமல்


 வண்ணக் கோடுகள் தாம் அவள் முகத்தில் எண்ணக் கோடுகள்


சின்னக் கோடுகள் தாம் அவள் முகத்தில்

தீர்வற்ற கோடுகள்


பிரித்த கோடுகள் தாம் அவள் முகத்தில் 

வடுவுள்ள கோடுகள்


வலிகள் இல்லாமல் உண்மை பிறக்க,

வேண்டுவது வண்ணமிகு வார்த்தைகள் 


அழகாய் திறமை வெளிப்பட , வேண்டுவது வண்ணமிகு ஆற்றல்கள்


அழியா புகழ் பெற, வேண்டுவது வண்ணமிகு செயல்கள்


குறையா ஞானம் பெற, வேண்டுவது வண்ணமிகு சிந்தனைகள்


கூரைகள் வேயப்பட்ட வீடல்ல அவள் வண்ணமிகு முகம்

கோடுகளால் வரையப்பட்ட அனுபவ மாளிகையே!


மஞ்சள் குங்குமம் கொண்ட முகமாயினும் அதையும் மீறி தெரியுது அவளின் வரிமைக்கோடுகள்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...