Friday, March 22, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


கோடைக்கு குடையாவது மட்டுமல்ல

இயற்கையின் கொடையும் குடை போலே!

கோடாரி இல்லா மனிதன் இருக்கும் வரை 

தருவும் தரும் நிழலே!


நட்ட மரங்கள் பலன் கொடுக்க

பலன் தந்த மரங்கள் பட்டு போக 

பட்ட மரங்கள் வெட்டு பட 

வெட்டிய மரங்கள் விற்க 

விற்ற மரங்கள் 

தச்சனிடம் போக

தச்சணிடம் சென்ற

 மரங்கள் பொருளாக

அந்த பொருளும் 

கோடாரியின் பிடியாக

மறுபடியும் போனது

மிச்ச மீது மரத்தை வெட்ட

ஓர் மரம் செழித்து வளர 

பல மரங்களை வெட்டியவன் புத்திசாலியா ?

இல்லை

பத்து மரங்களை வெட்டிய இடத்தில் 

ஓர் மரம் நட வைத்தது சரியா?

இல்லை

தன் களைப்பு நீங்க

ஓர் மரம் விட்டு வைத்தது சரியா?

உலக அரசியலுக்கு இதுவே 

சிறந்த உதாரணம்

 வெட்டுபட்டவனை தகிக்க வரவில்லை இந்த ஆதவன்

வெட்டுண்டானாலும் சிலையாய் மாறாமல்

துளிர்விட மழையையும் அனுப்பி

வைப்பான் விரைவில்


 கோடாரியால் வென்றவன் மறைமுகமாக

வெட்டுப்பட்டவன் அவன் நிலையிலே

நம் கண் முன்னே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...