Saturday, March 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


விடியல் எதற்கு?


பகைமை மறக்க - புது

பாதை அமைக்க - என்றும் 

பிரிவு விலக்க - சீரான 

புத்துணர்ச்சி பெற - புன்னகை 

பூத்து குலுங்க - வெற்றி 

பெற்றவை நிலைக்க - நிலையான 

பேரின்பம் தழைக்க - என்றும்

பைங்கனி சுவைக்க - எந்நேரமும் 

பொறுமை பேண - தீரா 

போராட்டத்தின் ஊடே

போற்றுதல் காண


வேண்டுமே! எந்நாளும் பிறக்கும் விடியலில்


அறியாத இடத்தில் மறைவாய் வாழும் நிமிடங்கள் 

சொல்லும்

இனம் புரியா 

மனதில்

 பதைபதைப்பு


 தேடும் விழிகள் அடைந்தது யாது?


கலையாத மேகங்களா?


தெரியாத பாதைகளா?


சுவாசிக்க மறந்த நிமிடங்களா?


சுவைக்க மறந்த வஸ்த்துக்களா?


வளராத அறிவியலா?


தெளியாத மனங்களா? 


தொலைத்த நாட்களா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...