Monday, March 18, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



அடி மேல் அடி வைத்து நடந்தாலும்

பந்தத்தை மீறிய 

நட்பின் அடையாளம் இவர்கள் 

குடும்பத்தின் அடித்தளமும் இவர்கள்


 தெளிவில்லாத நடையில் தெளிவான பற்றுதல் ஒருவருக்கொருவர்


 சித்திறத்திற்கு மட்டுமே ஏற்றது

நடைமுறைக்கு அல்ல

இருவரும் யணிப்பது முதியோர் இல்ல வாசலுக்கு என்பதால்


ஏந்துதல் தெரியா வாழ்வில்


உந்துதலோடு பயணம்


பந்தல் போடும் நாட்கள் வரை


வந்த இடத்திற்கு திரும்பி விடுவதால்


எந்த துணையும்

 நிரந்தரமில்லை


சொந்தமும் பந்தமும் ஒன்றிணைந்து 


 பயணிக்க முடியா

இவ்வுலகில்


தாரமும் தாயே, 

கணவனை அவள் பிரசிவிக்காவிட்டாலும்


தாரமும் தாயே,

கணவனை முடிந்த வரை பக்குவப்படுத்துவதால்


தாரமும் தாயே,

கணவனை தன் தோளில் தாங்குவதால்


தாரமும் தாயே, கணவனை தன் இறுதி மூச்சு வரை நேசிப்பதால்


வாலிபம் தேய்ந்தது

வயோதிகம் பிறந்தது


அவசியம் சுருங்கியது

ஆளுமை கைமாறியது


அனுபவம் பேசியது

அணுகுமுறை மாறியது


இயல்பு இழந்தது

இருக்கை அழைத்தது


இயலாமை தவிப்பானது

இருட்டு சினேகமானது 


உண்மை தெரிந்தது

உரிமை சுட்டது


பாதம் தளர்ந்தது

பயணம் வெறித்தது 


பாசம் தோற்றது

பரவசம் கொண்டது


நடை விலகியது

நாவை துறந்தது 


காமம் அடங்கியது

காதல் பிறந்தது


வயோதிகம் பேண வேண்டியது 

அதில் ஒளிந்துள்ள

வாலிபம் அழகானது

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...