Tuesday, March 12, 2024

ஆணிடம் பெண்ணின் குரல் by Veena Shankar

 


 ஆணிடம் பெண்ணின் குரல்


தாங்குவது நீங்கள் என்றாலும் தாக்கப்படுவதும் நாங்களே!


பிறப்புக்கு காரணம் நீங்கள் என்றாலும் பிரசுவிப்பதும் நாங்களே!


வருமானத்தை ஈட்டுவது நீங்கள் என்றாலும் வறுமையை அழிப்பதும் நாங்களே!


எத்தனித்து பெறுவது நீங்கள் என்றாலும் தத்தளித்து தருவதும் நாங்களே!


ஆதிக்கம் கொள்வது நீங்கள் என்றாலும் ஆராதனைக்கு உரியவர் நாங்களே!


தருவே நீங்கள் என்றாலும் தருணத்தில் வளர்ந்து வருவதும் நாங்களே!


மண்ணின் மைந்தரகள் நீங்கள் என்றாலும் தெய்வமாக போற்றப்படுவதும் நாங்களே!


பொறுமை காப்பது நீங்கள் என்றாலும் பெருமை கொள்ள செய்வதும் நாங்களே!


பரந்த நீரோடை நீங்கள் என்றாலும் அதில் நீரலையும் நாங்களே!


முடி சூடும் மன்னன் நீங்கள் என்றாலும் அந்த மணிமுடிக்கு திலகம் நாங்களே!


தெறிக்கும் சகதி என்றாலும் 

தெளிந்த நீராவதும் நாங்களே !


ஆண்களே! பெண்மையை பாராட்ட கற்றுக் கொண்டாலும்

 பெண்ணின் நிழலில் வாழ்ந்து பாருங்கள்.


பெண்மையின் அர்த்தம் புரியும்


பெண்ணின் மகத்துவம் தெரியும்


நீரில்லாமல் நிலமில்லை

நிலமில்லாமல் பயிரில்லை

பயிரில்லாமல் விளைச்சல் இல்லை

விளைச்சலில்லாமல் வருவாய் இல்லை

வருவாய் இல்லாமல் வசந்தம் இல்லை

வசந்தம் இல்லாமல் வாழ்வு இல்லை

வாழ்வில் பெண் இல்லாமல் ஏதும் நிரந்தரமில்லை

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...